spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!

-

- Advertisement -

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு காளைகளின் உரிமையாளர்களும் அதே போல் காளையர்களும் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஒப்புகை சீட்டை வழங்கி வருகின்றனர்.

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டை வழங்கல்!தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வருகின்ற ஜனவரி நான்காம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் அனுமதி கேட்டு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை இறுதி கட்டமாக செய்து வரும் நிலையில் இன்றோ, நாளையோ ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படக்கூடிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டு பங்கேற்பதற்காக காளைகளின் உரிமையாளர்களும் காளையர்களும் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் இணையதளத்தில் விண்ணப்பித்து விண்ணப்பித்ததற்கான ஒப்புகைச் சீட்டை ஜல்லிக்கட்டு நடக்கும் விழா குழுவினரிடம் பெற்று சென்று வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

MUST READ