spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக தண்ணீர் நாள்- அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்

உலக தண்ணீர் நாள்- அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்

-

- Advertisement -

உலக தண்ணீர் நாள்- அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்

இயற்கையைக் காப்பதன் மூலம் தண்ணீர்வளத்தையும் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Anbumani Ramadoss

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் உலகத்தில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள் (#BeTheChange you want to see in the world) எனும் மகாத்மாவின் பொன்மொழியுடன், காட்டுத்தீயை அணைக்க முயன்ற தேன்சிட்டுவின் கதையை முன்வைத்து, மார்ச் 22 உலக தண்ணீர் நாள் #WorldWaterDay உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்திய மக்களில் 7% பேர் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவின் நிலப்பரப்பில் 4%; நீர்வளத்தில் 3% மட்டுமே தமிழ்நாட்டின் பங்காக உள்ளது. தமிழ்நாட்டில் கிடைக்கும் தனிநபர் சராசரி நீர் அளவு வெறும் 590 கன மீட்டர் மட்டுமே. இந்திய சராசரியான 1508 கன மீட்டரை விட இது மிகக் குறைவு.

we-r-hiring

சர்வதேச அளவில் தீர்மானிக்கப்பட்ட 1700 கன மீட்டர் நீரை விட, தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் 590 கன மீட்டர் நீர் மிக மிகக் குறைவு. தற்போதைய நிலை நீடித்தால், 2050 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபர் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய நீரின் அளவு வெறும் 416 கன மீட்டராக குறைந்துவிடும். தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகள், ஏரிகளை காப்பாற்றுதல்; காடுகளைக் காத்தல்; நீர் மாசுபாட்டை தடுத்தல்; மணல் கொள்ளையை ஒழித்தல்; வெளி மாநில ஆறுகளில் தமிழ்நாட்டின் உரிமையை காத்தல் என அனைத்து வழிகளிலும் தமிழ்நாட்டின் நீர் வளத்தை மீட்க அனைவரும் முன்வர வேண்டும். #AcceleratingChange” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ