spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்!

இராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்!

-

- Advertisement -

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கையில் நெற்கதிருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25,000 வழங்க வேண்டும். அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100% தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும்.

we-r-hiring

இராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்!மிளகாய் ஏக்கருக்கு 25,000 வழங்கிட வேண்டும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளிபடி செய்ய வேண்டும், காலம் தாழ்த்தாமல் 2023-24 ஆண்டுக்கான நிவாரணம் மற்றும் இழப்பீடு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி வைகை விவசாய சங்க தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கையில் நெற்கதிருடன் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் யாரும் வராத நிலையில் விவசாயிகள் போலீசார் தடையை மீறி பேரணியாக ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. அதன் பின்னர் சாலை போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு சென்றனர்.

MUST READ