Homeசெய்திகள்இந்தியாராட்டினம் கீழே விழுந்து விபத்து - 11 பேர் காயம்

ராட்டினம் கீழே விழுந்து விபத்து – 11 பேர் காயம்

-

- Advertisement -
ராட்டினம் கீழே விழுந்து விபத்து – உயிர் தப்பிய சிறுவர்கள்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் நடந்த கண்காட்சியில் ராட்சத ராட்டினம் அருந்து விழுந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

ராட்டினம்

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் குந்தன் நகர் பகுதியில் நடத்தப்பட்ட கண்காட்சியில் மேலே சுற்றும் ராட்டினத்தில் சிறுவர் சிறுமிகள் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென ராட்டினத்தின் கேபிள் அறுந்து ராட்டினம் வேகமாக கீழே இறங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ராட்டினத்தில் அமர்ந்திருந்த 11 பேர் காயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

we-r-hiring

காயமடைந்த 11 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராட்டினம் உறுதித்தன்மையை இழந்து காணப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ராட்டினத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ