புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா இளம் பெண்ணுக்கு தனது பழுதான செல்லை சர்வீஸ் செய்ய, கடையில் கொடுத்த போது காதலனுடன் பெண் இருந்த 250 அந்தரங்க படங்களை திருடிய செல்போன் கடைக்காரர்…! சரி செய்த செல்போனில் தனது செயலி மூலம் கடைசியில் நடந்த நடவடிக்கைகளை சோதனை செய்த போது, கடைக்காரர் அவரது செல்போனுக்கு மாற்றம் செய்திருப்பது தெரியவந்தது. புகைப்படங்களை போலீசார் அழித்து கடை உரிமையாளரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரிக்கு கொல்கத்தாவை சேர்ந்த 2 பெண்கள் சுற்றுலா வந்தனர். அப்போது ஒருவரின் செல்போன் பழுதானதால், ரெயின்போ நகரில் உள்ள பழுது நீக்கும் கடையில் கொடுத்தார். கடை உரிமையாளர், ஸ்கிரீன் பாஸ்வேர்டை கூறும்படியும், அரைமணி நேரம் கழித்து செல்போனை பெற்றுக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். அந்த பெண் தனது பாஸ்வேர்டை தெரிவித்தார். பின்னர் அரைமணி நேரம் கழித்து பழுது நீக்கிய செல்போனை வாங்கிய அவர், தனது செயலி மூலம் கடைசியில் நடந்த நடவடிக்கைகளை சோதனை செய்தார். அப்போது அவரின் கேலரியில் இருந்த படங்களை கடை உரிமையாளர் 15 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்திய விபரம் தெரியவந்தது.
இதுகுறித்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். செல்போனில் காதலுடன் பெண் இருந்த, 250க்கும் மேற்பட்ட போட்டோக்களை தனது போனில் உரிமையாளர் மாற்றம் செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் போனில் இருந்த படங்களை போலீசார் அழித்தனர். பின்னர் அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
குறிப்பு; சைபர் கிரைம் அலுவலகம் பைல் விசூவல் பயன்படுத்தலாம், இதுகுறித்து சீனியர் எஸ்பி நாராசைதன்யா கூறுகையில், செல்போனை பழுதுநீக்க தரும் போது அதை சம்பந்தப்பட்ட சர்வீஸ் டீலர்கள், தெரிந்த நபர்களிடம் கொடுத்து சர்வீஸ் செய்ய வேண்டும். திருடும் வாய்ப்புள்ளதால் செல்போனில் அந்தரங்க படங்களை சேமித்து வைக்க வேண்டாம். அனுமதியின்றி மற்றவர் படத்தை பயன்படுத்தினால் வழக்குப்பதியப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர் என்று தெரிவித்தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!