- Advertisement -
அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு
தாம்பரம் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேரூந்து மோதியதில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் நாகராஜ்(29) மீது அரசு பேரூந்து மோதியதில் சாலை தடுப்பில் ஏறி நின்றது. இதில் நாகராஜ் உயிரிழந்தார்.

உயிரிழந்த காவலர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்தார்.
பேரூளூரில் இருந்து கோயம்பேடு சென்ற அரசு பேரூந்தை ஓட்டி சென்ற ஓட்டுனர் காளிதாஸ் கைதுசெய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.