spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் சூர்யா பட நடிகை!

ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் சூர்யா பட நடிகை!

-

- Advertisement -

சூர்யா பட நடிகை ஒருவர் ஹாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் சூர்யா பட நடிகை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா நடிப்பில் கங்குவா எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதற்கு முன்னதாக வெளிவந்த கல்கி 2898AD படத்திலும் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திஷா பதானி. இவர் தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் இந்தி மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். இந்த நிலையில் இவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அதன்படி ஹாலிவுட்டில் டுராங்கோ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் திஷா பதானி. இது தொடர்பான படப்பிடிப்பு மெக்சிகோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் சூர்யா பட நடிகை!மேலும் நடிகை திஷா பதானி படப்பிடிப்பு தளத்தில் மற்ற ஹாலிவுட் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட் அறிமுகமாகி இருக்கும் நிலையில் திஷா பதானியும் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ