spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

-

- Advertisement -

சிக்கன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று சொல்லப்படுகிறது.சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?சிக்கன் என்பது குறைந்த கலோரி கொண்ட உணவாகும். அதாவது சிக்கனில் அதிகமான அளவு புரதம் இருக்கிறது. பொதுவாக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இது கலோரிகளை எரிக்க உதவும். எனவே சிக்கன் சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதன் மூலம் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சிக்கன் எடுத்துக் கொண்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். மேலும் சிக்கன் சாப்பிடுவதனால் தசைகள் வலுவாகும். இருப்பினும் சிக்கனை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையெனில் பல விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் சமைத்த சிக்கனை சாப்பிடுவது நல்லது. கடைகளில் வாங்கி சாப்பிடும் சிக்கன் சரியாக சுத்தம் செய்யப்பட்டதாக இருக்கக்கூடும். சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். அடுத்தது சிக்கனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதிக அளவிலான மசாலாக்கள் சேர்த்து சாப்பிடுவதையும் குறைக்க வேண்டும். சிக்கனை வேகவைத்து சாப்பிடலாம். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ