spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கும்பமேளா நீராடல் சர்ச்சைப்பேச்சு... இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கார்க்கே மீது அடுத்தடுத்து வழக்கு..!

கும்பமேளா நீராடல் சர்ச்சைப்பேச்சு… இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக கார்க்கே மீது அடுத்தடுத்து வழக்கு..!

-

- Advertisement -

கங்கை நதியில் நீராடுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதையடுத்து அவருக்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் கார்கே மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 3 ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மஹாகும்பமேளாவில் நீராடுவது குறித்து கருத்துத் தெரிவித்த கார்கே, கங்கையில் நீராடுவது வறுமையை நீக்குமா? வேலைவாய்ப்பை அளிக்குமா? எனக் கேட்டிருந்தார். இதுகுறித்து வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, ”கார்கேவின் பேச்சு சர்ச்சைக்குரியது.மகாகும்பத்தை அடைந்து கங்கையில் நீராடும் லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிரானது.கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் நீராட வருகிறார்கள். தனது பேச்சால் கோடிக்கணக்கான சனதானி, இந்து சகோதரர்களை காயப்படுத்தியுள்ளார். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அவரது இந்தப்பேச்சு அமைந்துள்ளது எனக் கூறி வழக்குத் தொடுத்துள்ளார்.

we-r-hiring

அந்த வழக்கில், ”நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்கே, கங்கை, கும்பத்தில் குளித்தால் வேலையில்லா திண்டாட்டம் நீங்காது எனததெரிவித்துள்ளார்.அரசியல் ஆதாயம் பெறுவதற்காக வேண்டுமென்றே சனதானி இந்துக்களைக் காயப்படுத்தியிருக்கிறார் கார்கே. தற்போது இந்தியா, வெளிநாடுகளில் இருந்து இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான மக்கள் கும்ப ஸ்நானம் செய்ய உள்ளனர். அவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன.

செய்தித்தாள்கள், டிவி சேனல்களில் அவரது இந்தப்பேச்சைக் கேட்டு ​​​​எனக்கும் காயம் ஏற்பட்டது. வேதனையடைந்தேன். இத்தகைய அறிக்கை வேண்டுமென்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கார்கேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்து உள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 298, 302, 352 ஆகிய பிரிவுகளின் கீழ் சிஜிஎம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை பிப்ரவரி 3, 2025 அன்று ஒத்திவைத்தது.

மறுபுறம், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மூத்த வழக்கறிஞர் அவதேஷ் சிங் தோமர் சார்பில் கார்கேவின் அறிக்கை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச டிஜிபி மற்றும் குவாலியர் எஸ்பி ஆகியோரிடம் தோமர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மகாகும்பாபிஷேகம் தொடர்பாக கூறிய கருத்துகளுக்காக கார்கே மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கார்கே குறிவைத்து, ‘100 பிறவிகளில் கூட சொர்க்கத்திற்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்கள் பல பாவங்களைச் செய்துவிட்டனர்’ என்று கார்கே கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ