spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

‘விடாமுயற்சி’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் ட்விட்டர் விமர்சனம்.'விடாமுயற்சி' படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) வெளியாகிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இன்று விடாமுயற்சி படத்தை கண்டு களித்து வருவதோடு இப்படம் குறித்த தங்களின் கருத்துக்களை ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி ரசிகர் ஒருவர், “அஜித், அர்ஜுன், ஆரவ் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருக்கிறது. அனிருத்தின் பிஜிஎம் செமயாக இருக்கிறது. இந்த படம் இரண்டு ஹாலிவுட் படங்களின் ரீமேக். கடைசி 25 நிமிடங்கள் அருமை. கார் சாகசக் காட்சி சூப்பர். கிளைமாக்ஸ் காட்சி குறைவாக இருந்தாலும் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

அடுத்தது முதல் பாதையில் இறுதியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருப்பதாகவும் முதல் 30 நிமிடங்கள் மெதுவாக சென்றாலும் விறுவிறுப்பான திரில்லர் கதையாக நகர்கிறது என்று ஒரு ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “விடாமுயற்சி படத்தில் மாஸான ஓபனிங் சீன் இல்லை. மாஸ் பிஜிஎம் இல்லை. பில்டப் இல்லை. ஆனால் மகிழ் திருமேனி முதல் பாதியை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். அனிருத்தின் பிஜிஎம் அருமையாக இருக்கிறது” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “பத்ம பூஷன் அஜித்குமார் என்று போடப்பட்டிருக்கும் வாழ்த்து அட்டையை பார்த்ததும் ரசிகர்கள் அஜித்தே என்று ஆர்ப்பரிப்பது திரையரங்கையை அதிர வைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ