spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தேர்தல் கூட்டணியில் மாற்றம்.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு

தேர்தல் கூட்டணியில் மாற்றம்.. அண்ணாமலை திடீர் அறிவிப்பு

-

- Advertisement -

அடுத்த 2 நாட்களில் அமித்ஷா தமிழகம் வருவதாக உள்ளாா். அப்போது பல்வேறு மாற்றங்கள் நிகழும் என அண்ணாமலை மறைமுகமாக கூறியுள்ளார்.தேர்தல் கூட்டணியில் மாற்றம்.. அண்ணாமலை திடீர் அறிவிப்புதேர்தல் கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளார். இந்நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணிக்கான அச்சாரம் என பலரும் தங்களை பதிவு செய்து வருகின்றனர். அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலை பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று வேலுமணியின் மகன் திருமணத்திற்கு சென்ற அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கம் காட்டியுள்ளனர். அதேபோல், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தலைவர்களும் பாஜக உடன் கூட்டணி வைக்க விரும்பிய போதும், எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக இருந்தார். இதற்கிடையில் தமிழக வெற்றி கழக்கத்துடன் கூட்டணி அமைக்கலாம் என அறியப்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என பிரசாந் கிஷோர் கூறிவிட்டார். இதனால், மீண்டும் பாஜக உடன் செல்ல எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

எங்களுக்கு எப்போதும் ஒரே எதிரிதான் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

we-r-hiring

MUST READ