தமிழ்நாட்டில் உதயமாகிறது 8 புதிய மாவட்டங்கள்?
ஆரணி, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களை தனி மாவட்டமாக உருவாக்க பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் கேள்விக்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “நிதிநிலைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் மூலமாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அமைச்சர், வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகள் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறினார்.


