spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலாஷேத்திரா மாணவிகளுக்கு இருக்கும் அச்சம்! தைரியம் சொல்லும் வானதி சீனிவாசன்

கலாஷேத்திரா மாணவிகளுக்கு இருக்கும் அச்சம்! தைரியம் சொல்லும் வானதி சீனிவாசன்

-

- Advertisement -

சென்னை அடையாறு கலாஷேத்திரா பேராசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர், ஒட்டுமொத்த மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் யார்? புகார்கள் என்ன? என்று கேட்டபோது, ஆசிரியர்கள் முன்பு புகார் சொல்ல மாணவிகள் தயங்கி நின்றனர். ஆசிரியர்கள் அல்லாமல் அதுவும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதைத்தான் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் வலியுறுத்தினார்.

we-r-hiring

அடையாறு கலாஷேத்திரா விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன். ’’கலாஷேத்திரா விவகாரத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் இங்கு வந்து விசாரணை நடத்தி இருக்கிறார். மாணவிகளிடமிருந்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரும் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அப்படி இருந்தும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று மாணவர்கள் போராடி வருகிறார்கள்’’ என்பதை குறிப்பிட்டுச்சொன்னவர்,

j

’’தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக சொல்ல முடியாமல் தங்களின் அடையாளம் வெளிப்பட்டு விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் பெண்கள். அதனால், மாணவிகளின் அடையாளங்களை வெளிப்படுத்தாத வகையில் புகார்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் மூலமாக மாணவிகளை தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும். தவறு நடந்திருந்தால் எந்த வகையிலும் தவறுக்கு உடன் போகாமல் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாகத் தான் நிர்வாகம் இருக்க வேண்டும். முதலில் மாணவிகள் புகார் அளிப்பதற்கு தக்க சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் ’’என்று கேட்டுக்கொண்டார் .

அதே நேரம், ‘’ பாதிக்கப்பட்ட மாணவிகள் யாருக்கும் பயப்படாமல் உண்மையைச் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

MUST READ