spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 பேர் கைது

சென்னையில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 பேர் கைது

-

- Advertisement -

கொடுங்கையூரில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல். மும்பையில் இருந்து வாங்கி வந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது அம்பலம். ஐந்து பேர் கைது.சென்னையில் 570 போதை மாத்திரைகள் பறிமுதல் – 5 பேர் கைதுவட சென்னையில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன் படுத்துவதாகவும் மேலும் அதனை விற்பனை செய்வதாகவும் புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களை பிடிக்க உஷார் படுத்தப்பட்டனர்.

அந்த வகையில் கொடுங் கையூர் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் நேற்று மாலை கவியரசு கண்ணதாசன் பேருந்து நிறுத்தம் அருகே சிலர் போதை மாத்திரைகளை கை மாற்றுவதாக கொடுங் கையூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஐந்து பேரை மடக்கிப் பிடித்தனர்.

we-r-hiring

இவர்களிடம் இருந்து மொ த்தம் 570 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஐந்து சிரஞ்சிஉள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.பிடிபட்ட ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் செம்மஞ்சேரி ஆறாவது தெருவை சேர்ந்த தனுஷ் வயது 21, அதே பகுதியைச் சேர்ந்த  கார்த்திக் வயது 24 ,கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 30 கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது 20 பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சசிராம் 27 என்பது தெரிய வந்தது.

இதில் கார்த்திக் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள்   இருப்பதும் இவர் செம்மஞ் சேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கடந்த சில நாட் களுக்கு முன்பு மும்பைக்கு ச் சென்று அங்குள்ள மருந்து கடையில் ஒரு அட்டை வலி நிவாரண மாத்திரை 415 ரூபாய்க்கு வாங்கி அதனை சென்னைக்கு கொண்டு வந்து ஒரு மாத்திரை 300 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட பிரிட்டன் பெண்: ரூம் போட்டு கூட்டுப் பலாத்காரம்..!

MUST READ