spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படம் எப்படி இருக்கு?.... திரை விமர்சனம் இதோ!

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த ‘பெருசு’ படம் எப்படி இருக்கு?…. திரை விமர்சனம் இதோ!

-

- Advertisement -

பெருசு படத்தின் திரை விமர்சனம்.கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படம் எப்படி இருக்கு?.... திரை விமர்சனம் இதோ!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இளங்கோராம் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பெருசு. அடல்ட் காமெடி என்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், சனில், பால சரவணன், நிஹாரிஹா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் இன்று (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படம் எப்படி இருக்கு?.... திரை விமர்சனம் இதோ!
வைபவ் மற்றும் சுனில் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களின் தந்தை திடீரென டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார். வைபவ், சுனில் ஆகிய இருவரும் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களின் தந்தையின் உடலில் வெளியில் சொல்ல முடியாத மாற்றம் ஏற்படுகிறது. இதை சரி செய்தால்தான் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடியும். எனவே அதை சமாளித்து தனது தந்தையின் இறுதிச் சடங்கை நடத்தினார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படம் எப்படி இருக்கு?.... திரை விமர்சனம் இதோ!

we-r-hiring

அதாவது வைபவ் வழக்கம்போல் தனது நகைச்சுவை கலந்த நடிப்பினை வெளிப்படுத்தி அசத்தி விட்டார். அவரைப் போல் சுனில் ரெட்டியும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். அதாவது இருவரின் காமெடி டைமிங் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. தங்களின் தந்தைக்கு ஏற்பட்டுள்ள வெளியில் சொல்ல முடியாத சிக்கலை கால்நடை மருத்துவர் முதல் சாமியார் வரை எடுத்துச் சென்று இருவரும் செய்யும் கலாட்டா வேற லெவலில் இருக்கிறது. அதன்படி முதல் பாதி செம ரகளையாக செல்கிறது. இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி சூப்பர். கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படம் எப்படி இருக்கு?.... திரை விமர்சனம் இதோ!படம் முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோடு சுவாரஸ்யமாகவும் கதையை நகர்த்தி உள்ளார் படத்தின் இயக்குனர். அதிலும் இப்படி ஒரு கதைக்களத்தை குடும்பத்தைச் சுற்றி நகர்த்திக் கொண்டு போன விதமும் அருமை. அடுத்தது நிஹாரிகா, பால சரவணன், முனீஸ் காந்த், தீபா ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். மேலும் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, சத்திய திலகத்தின் ஒளிப்பதிவு போன்றவை சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்த படத்தின் கான்செப்ட் சிலருக்கு பிடித்திருந்தாலும் சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதுதான்  படத்தின் மைனஸ்.

MUST READ