
கவிஞர் வைரமுத்துவின் ஒவ்வொர் பிறந்தநாளின் போதும் நடிகர் ஜெய்சங்கர் தனது உதவியாளர் மூலம் பூங்கொத்து கொடுத்து அனுப்பி விட்டு, போனில் வாழ்த்து சொல்வார். வைரமுத்துவுக்கு கலைஞர் கருணாநிதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா போன்று ஏராளமான நண்பர்கள் இருந்தாலும், மறைந்த நண்பர்கள் குறித்து அவர் நினைத்துப்பார்க்கிறார்.

பி.எஸ்.வீரப்பா, எஸ்.ஏ.அசோகன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ் என்று கலை உலகில் என் நெருக்கமான நண்பர்கள் என்று குறிப்பிடுகிறார். கடந்த தலைமுறையை பற்றி
யார் நினைக்கிறார்கள்? என்று ஆதங்கப்படும் வைரமுத்து, ஒரு தலைமுறை இறந்துவிட்டது; ஒரு தலைமுறை மறந்துவிட்டது; கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் என்று சொல்லும் வைரமுத்து, எல்லார்க்கும் இது நேரும் என்று எச்சரிக்கிறார்.
அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் என்று வரிகள் போட்டு அவர் அந்த கவிதையை முடிக்கிறார்.



