spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

-

- Advertisement -

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் இணையதள குற்றுவழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச வீடியோ.. குடும்ப பெண்களுக்கு அனுப்பி மிரட்டிய கடன் "ஆப்".. ஐடி  பொறியாளர் விபரீத முடிவு | Chennai Software engineer committed suicide as  Loan apps send his morphing obscene ...

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இணையதள குற்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த சிவா லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியா. இவர் வீட்டு கொல்லை புறத்தில் குளிப்பது வழக்கம். இந்நிலையில் மாலை வழக்கம் போல் வீட்டின் கொல்லை புறத்தில் குளித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதார்த்தமாக திரும்பி பார்த்த போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்த் என்பவர் வீட்டு ஜன்னல் வழியாக குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில் படம் பிடித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்த மாமியார் நிர்மலா, மாமனார் மணிக்கண்ணன் வந்துவிட்டனர்.

we-r-hiring

அவர்களை பார்த்த உடன் ஜன்னலை விட்டு விலகி விட்டார் என‌ கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வசந்தை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ