spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தம் வாழ்நாளை மது ஒழிப்பிற்காக செலவிட்ட தலைவர் - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்...

தம் வாழ்நாளை மது ஒழிப்பிற்காக செலவிட்ட தலைவர் – தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருத்தம்

-

- Advertisement -

ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர் என தமிழக வெற்றி கழக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.

தம் வாழ்நாளை மது ஒழிப்பிற்காக செலவிட்ட தலைவா் - தமிழக வெற்றி கழக தலைவா் விஜய் வருத்தம்

we-r-hiring

இது குறித்து அவா் தனது வலைதளப்பக்கத்தில், “கூறியிருப்பதாவது, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு.குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று கூறியுள்ளாா்.

சாதாரண மக்களைக் கசக்கிப் பிழியும் பாஜக அரசு – மக்கள் நீதி மய்யம்

MUST READ