spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – ஐகோர்ட் அறிவிப்பு

நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – ஐகோர்ட் அறிவிப்பு

-

- Advertisement -

கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் திஷந் ஜெகஜல கில்லாடி என்ற படத்திற்காக அவர் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு வழக்கு தொடர்ந்தாா். நடிகர் பிரபு அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தாா்.நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் – ஐகோர்ட் அறிவிப்புசென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்தது. சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் திஷந் ஜெகஜல கில்லாடி என்ற படத்திற்காக அவர் பெற்ற கடனை திருப்பி செலுத்துமாறு வழக்கு தொடர்ந்தாா். இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் கூதூர் நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும், ஏற்கனவே தனது தந்தை வீட்டை உயில் மூலம் தனக்கு எழுதி வைத்து விட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

we-r-hiring

அதே போல் இந்த வீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பில்லை என்று ராம் குமாரும் பிராமண பத்திர மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அப்துல் குதூர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை ஏற்று உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து ஆணை பிறப்பித்து, வழக்கை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என ஐகோர்ட் தெரிவித்தது. மேலும் இந்த வில்லங்க பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கும், நீதிபதி உத்தரவிட்டார்.

எங்க பாடல்களினால் தான் ‘குட் பேட் அக்லி’ படம் ஹிட்டானது…. விளாசிய கங்கை அமரன்!

MUST READ