மெடிக்கல் கல்லூரி மாணவியின் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஐடி மூலமாக பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.30 வயதான மருத்துவ மாணவி கடந்த 2022 ஆம் ஆண்டு எழும்பூரில் தனியாக வீடு எடுத்து மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, ஐ சி எப் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்த போது நீச்சல் பயிற்சியாளர் பாலாஜி என்பவர் நண்பராக பழகி வந்துள்ளார்.
பாலாஜி மருத்துவ மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்திய நிலையில், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் மாணவி போன்று இன்ஸ்டாகிராம் ஐடி ஒன்றை போலியாக உருவாக்கி அதில் மாணவி உடைமாற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட மருத்துவ கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நீச்சல் பயிற்சியாளர் திருவல்லிக்கேணியை சேர்ந்த பாலாஜியை ராஜமங்கலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.