தமிழ்நாடு FIITJEE தனியார் பயிற்சி மைய தலைவர் மற்றும் இயக்குநர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கீழ்பாக்கத்திலுள்ள FIITJEE தனியார் மையம் பெற்றோர்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. FIITJEE மையம் 9,10 ,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து நுழைவுத் தேர்வு பயிற்சியளிக்க பணம் வசூலித்து, தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கின்றன. இவா்கள் திடீரென மையத்தை மூடியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனா். அந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு, கேரளா FIITZEE தனியார் பயிற்சி மைய தலைவர் அங்கூர் ஜெயின் இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்க்கொண்டு வந்துள்ளது.
ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருட்டு – 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார்!