சஹர் உணவு சாப்பிட்டு நோன்பு வைக்கும் திருமாவளவன்
வருடா வருடம் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து சமுத்துவ நோன்பினை கடைபிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் இவ்வருடமும் நோன்பினை கடைப்பிடித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஒருங்கிணைக்கும் 19 ஆம் ஆண்டு சமத்துவ நோன்பினை கடைபிடிக்கும் நிகழ்ச்சி சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நோன்பு நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த சஹர் நோன்பு நிகழ்ச்சியில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஒருங்கிணைக்கும் 19 ஆம் ஆண்டு நோன்பினை கடைப்பிடித்து வருகிறது. கட்சியினுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் கடந்த 19 வருடங்களாக நோன்பினை இருந்து வருகிறேன் தொடக்கத்தில் ஒரு நாள் இரண்டு நாள் நோம்பு கடைப்பிடித்தேன். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்து நாட்களாக நோன்பினை கடைப்பிடித்து வருகிறேன். நோன்பிற்கு விடிற்காலை 4.00 மணிக்கு உணவருந்தி விட்டு மாலை 6 மணி வரை நோம்பினை கடைபிடிக்கிறேன். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. இஸ்லாமிய சகோதரர்களுடன் விடுதலை சிறுத்தை இயக்கம் ஒரு சகோதரத்துவ ஒரு நல்ல நெருக்கத்தை இருக்கத்திலும் உள்ளது. மேலும் இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்” என தெரிவித்தார் .


