spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல்! மக்கள்நீதிமய்யம் தலைவர் வேட்பு மனு தாக்கல்!

வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல்! மக்கள்நீதிமய்யம் தலைவர் வேட்பு மனு தாக்கல்!

-

- Advertisement -

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக, அதிமுக சார்பில் அறிவிக்​கப்பட்​டுள்ள வேட்பாளர்​கள் மற்றும் மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.வருகின்ற 19 ஆம் தேதி தேர்தல்! மக்கள்நீதிமய்யம் தலைவர் வேட்பு மனு தாக்கல்!தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆறு இடங்களுக்கான தேர்தலில், தி.மு.க மூன்றிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க சார்பில், தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இன்று முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

அதேபோல், மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, இன்று மதியம் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்

we-r-hiring

MUST READ