spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்

30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்

-

- Advertisement -

விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன் என நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது – ப. சிதம்பரம் மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”பட்டா  கோருவது மட்டுமல்ல, பட்டா மாறுதல், பட்டாவில் பெயரைச் சேர்ப்பது நீக்குவது போன்ற விண்ணப்பங்களும் இருக்கின்றன. மாவட்ட வருவாய் அதிகாரி (DRO), கோட்ட வருவாய் அதிகாரி (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) என்று அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும் போது பட்டா தொடர்பான விண்ணப்பங்களும் குறைகளும் ஏன் மலைபோல் தேங்கிக் குவிந்திருக்கின்றன என்பது புரியாத புதிர்.

இந்த நிலை பல ஆண்டுகளாகப் பல அரசுகளில் நிலவி வரும் அவலம். கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்ட பொது அறையில் மக்கள் முன்னிலையில் ஒவ்வொரு விண்ணப்பமாக எடுத்து அதிகாரிகள் முடிவெடுத்தால் இந்தப் பணியை 3-6 மாதங்களில் முடிக்க முடியும் என்று கருதுகிறேன். ஒரு விண்ணப்பதாரர் மீண்டும் மீண்டும் குறை தீர்க்கும் நாட்களில் படையெடுப்பதைப் பல அதிகாரிகளிடம் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் புதிய ஆணை இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளாா்.

வெளியான முதல் நாளே இணையத்தில் லீக்கான ‘தக் லைஃப்’…. அதிர்ச்சியில் படக்குழு!

we-r-hiring

MUST READ