Homeசெய்திகள்சென்னைவணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்

வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம்

-

- Advertisement -

இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் சேவை! மெட்ரோ நிர்வாகம் சென்னையில்  பெருநகர் மற்றும் புறநகரை இணைப்பதற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ இரயில் திட்டத்திலுள்ள இரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்துடன் கூடிய ஒன்பது மாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய 9 மாடிகளுடன் 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட இரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் நான்காவது தளத்தில் மெட்ரோ இரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டு, இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் சுரங்க வாகன நிறுத்துவதற்காக 3 நிலைகளில் அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளது.  இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ இரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில்  பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது.

அதிலும்  குறிப்பாக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 9 மாடிகளை கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறான அமைப்பு இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!

MUST READ