சந்தானம் பட நடிகை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விவல் சோப் விளம்பரத்தின் மூலம் அறிமுகமான விசாகா சிங் அதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் அறிமுகமானார்.
இந்நிலையில் தமிழில் சந்தானம், பவர் ஸ்டார், சேது ஆகியோர் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


அதையடுத்து வாலிப ராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது படங்களில் தலைகாட்டாமல் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்கு என்ன பிரச்சனை என்று தெரிவிக்கவில்லை.
“இல்லை, நான் நீண்ட நேரம் இப்படி உடைந்து போய் இருக்க முடியாது.
இலையுதிர் காலம், குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் அடிக்கடி ஏற்படும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பிறகு – மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கித் திரும்புகிறது.
ஏப்ரல் எப்போதும் எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்தது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதால், அல்லது இது எனது பிறந்த மாதத்தின் முன்னோடியாக இருக்கலாம்
கோடை நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி, ஆரோக்கியத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன்.
மகிழ்வான தருணங்களாக அமையட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram


