Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

-

- Advertisement -

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு என கோவை மாஸ்டர் ப்ளான் 2041ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே நமது இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற உள்ள ‘கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041ஐ வெளியிட்டுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான, சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்!” இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

நேர்மைக்கு கிடைத்த வெகுமதி நான்கு கிராம் தங்க மோதிரம்…

MUST READ