வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் கோடம்பாக்கம் போக்குவரத்து பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கும், பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளரும் ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கலைவாணி என்பவர் வாகன ஓட்டிகளிடம் தொடர்ச்சியாக அநாகரிகமாக நடந்து கொள்வதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உயரதிகாரிகள் உத்தரவு வழங்கினா். இது சம்பந்தமாக புகார்கள் எழுந்தபோதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கலைவாணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஐயப்பன் என்பவரும் காவல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
மேலும், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கலைவாணி, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மதுபோதையில் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வடபழனி காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்ததும், அதிகாரிகள் விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியிடம் எவ்வித அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளவில்லை என்பதும் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் விதிமீறலில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர் என்பதும் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அப்போதே இளைஞர்கள் மீது பொய் புகார் அளித்த கலைவாணி மீது உயர் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் பரப்புரைய தொடங்கிய பழனிச்சாமி
