spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசெஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!

செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!

-

- Advertisement -

செஸ் விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழா செஸ் தொடங்கப்பட்டு உள்ளது.செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!சதுரங்க விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி என்கிற சோழா நிறுவனம் தற்போது சோழ செஸ் என்ற முயற்சியை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள சோழ செஸ் மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!சதுரங்க போட்டிக்கான சோழா பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. சிறந்த கட்டமைப்புடன் உரிய பயிற்சி அளிப்பதற்கான தரவரிசையில் முதல் பத்து இடங்களில் உள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

we-r-hiring

இந்தியா முழுவதும் இருந்தும் விண்ணப்பித்து இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். இதே போல இன்னும் நிறைய பயிற்சி மையங்கள் வர வேண்டும் என்று கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!திறமையான பயிற்சியாளர்களிடம் பயிற்சி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. சோழா செஸ் மையத்தில் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. இது ஒரு நல்ல முயற்சி என்றும் என்னுடைய இளமை வயதில் பல்வேறு இடையூறுகள் இருந்தது. அப்படி இல்லாமல் கற்றுக் கொள்வதற்கு இது போன்ற அகாடமி பயனுள்ளதாக இருக்கும் என்று பிரக்யானாந்தா கூறினார்.செஸ் ஆர்வலர்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு! ஆரம்பம் சோழா செஸ்!இந்தியாவில் உள்ள சிறந்த பயிற்சியாளர்கள் இங்கு வந்து பயிற்சி அளிக்கின்றனர். சதுரங்க போட்டியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்து கற்றுக் கொள்ளலாம். ஒரு வார பயிற்சி அளிக்கப்படுகிறது. செஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என விருப்பம் உண்டானால் அதற்கான சிறந்த பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கான இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இருந்து இந்த இணையதளத்தில் விண்ணப்பித்தால் அதை தேர்ந்தெடுத்து உரிய திறமை உள்ளவர்களுக்கான பயிற்சி கண்டிப்பாக வழங்கப்படும். வருடம் முழுவதும் இதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் . செஸ்ஸில் தமிழர்கள் சிறந்த பங்களிப்பு செய்து வருகின்றனர். அதேபோல இந்தியாவிலும் நிறைய வீரர்கள் வருகிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் உரிய பயிற்சி கட்டமைப்பு இல்லாததால் தான் அடுத்த தலைமுறைகளுக்கு உரிய செஸ் வீரர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுபோன்ற ஒரு நிலைமை இந்தியாவிற்கு வந்துவிடக் கூடாது. அதானால் தான் அடுத்த தலைமுறையினரும் உரிய பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே சோழா செஸ் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சதுரங்க விளையாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கும் அடுத்த தலைமுறை சாம்பிள் அடையாளம் கண்டு திறன்களை மேம்படுத்துவதற்கான நோக்கமாக இந்த சோலா செஸ் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தலைமுறைகளிலிருந்தும் நல்ல வீரர்கள் வந்து கொண்டிருக்க வேண்டும். அதையும் நோக்கமாக வைத்து இந்த முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்று தலைமை பயிற்சியாளரும் கிராண்ட் மாஸ்டர்மான ரமேஷ் கூறினார்

முன்னதாக இந்தியாவின் தரவரிசை பட்டியலின் முதல் இடத்தில் உள்ள கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் விழாவில் செஸ் துவக்க விளையாட்டை விளையாடினர். இந்த விழாவில் சோலா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் வெள்ளையன் சுப்பையா உட்பட செஸ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

தனுஷ், மமிதா பைஜூ நடிக்கும் புதிய படத்தின் அசத்தல் அப்டேட்!

MUST READ