ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியில் முதலீடு செய்த 300 பெண்களிடம் நூதன மோசடி…! கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி பெண்ணிடம் ரூ.9.14 லட்சம் அபேஸ் செய்த கும்பல்…! இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி சூரியகாந்தி நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சமூக வலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் பேசி பழகி வந்துள்ளார். அப்போது அந்த நபர் அந்த பெண்ணிடம் விலை உயர்ந்த கிப்ட் அனுப்புதாக கூறியுள்ளார். பிறகு சில நாட்களில் கஸ்டம்ஸ் அதிகாரி பேசுவதாக அந்த பெண்ணுக்கு ஒருவர் போன் செய்து பேசியுள்ளார். அப்போது உங்களுக்கு ஒரு கிப்ட் வந்துள்ளது. அதனைபெற்றுக்கொள்ள பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அந்த பெண் ரூ.9 லட்சத்து 14 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு எந்தவித கிப்ட் பார்சலும் வரவில்லை. பணம் அனுப்பிய நபரை தொடர்ப்பு கொண்டபோது அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதே போன்று ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டெலிகிராம் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை உள்ளதாக கூறி ரூ.75 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளனர். கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு டாஸ்க் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்கும் பகுதி நேர வேலை உள்ளது எனக்கூறி ரூ.20 ஆயிரமும், சுத்துக்கேணியை சேர்ந்த ஒரு ஆண் நபரிடம் ரூ.7,200மும், ரெட்டியார்பாளையம் ஒரு ஆண் நபரிடம் ரூ.20 ஆயிரத்து 300ம், வில்லியனூரை சேர்ந்த ஒரு ஆண் நபரிடம் ரூ.21 ஆயிரமும், வினோபா நகரை சேர்ந்த ஒரு ஆண் நபரிடம் ரூ.20 ஆயிரத்து 300ம் மோசடி செய்துள்ளனர். மேலும், ஒயிட் டவுனை சேர்ந்த ஒரு ஆண் நபரிடம் மர்ம நபர் ஒருவர் தான் புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்தில் தொழில் வாய்ப்பு உள்ளதாக கூறி ரூ.10 ஆயிரம் மோசடி செய்துள்ளனர்.
வினோபா நகரை சேர்ந்த ஒரு ஆண் நபர் ஆன்லைனில் லோன் வாங்கியுள்ளார். அவர் லோனை கட்டியப்பிறகு மர்ம நபர் ஒருவர் அவரது புகைப்படத்தை மார்ப்பிங் செய்து மிரட்டியுள்ளார். இதே போன்று ஒதியஞ்சாலையை சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தையும் மார்பிங் செய்து மிரட்டியுள்ளனர். சாரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் பிரிபயர் கேம் ஐடி கொடுப்பதாக வந்த தகவலின் பேரில் ரூ.2500 பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்தார். இவைகள் சம்பந்தமாக புகார்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘‘லுக் ஆப் மூலம் மோசடி’’
ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என என்ற விளம்பரத்தை நம்பி புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் முதலீடு செய்துள்ளனர். பிறகு தங்களுக்கு தினமும் ரூ.700 பணம் வராததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து சைபர் கன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்