மதராஸி படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 23 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். முருகதாஸ் இதனை இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி 2025 செப்டம்பர் 5ஆம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Big week.
Important week.
It begins 🚀#Madharaasi – in theatres from September 5 💥 pic.twitter.com/dUOeM9gia8— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) August 18, 2025

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரிய வாரம்..முக்கியமான வாரம்… அது ஆரம்பமானது” என்று குறிப்பிட்டு புதிய புகைப்படத்தை ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வாரம் ‘மதராஸி’ படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. ஆகையினால் இனிவரும் நாட்களில் ‘மதராஸி’ படத்திலிருந்து வெளியாக உள்ள இரண்டாவது பாடல், இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் தொடர்பான அப்டேட்டுகளை கொண்டாட ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள்.