Homeசெய்திகள்சினிமாதீபாவளி ரேஸில் இணைந்த பிரதீப்-ன் 'எல்ஐகே'.... தள்ளிப்போகும் 'டியூட்'!

தீபாவளி ரேஸில் இணைந்த பிரதீப்-ன் ‘எல்ஐகே’…. தள்ளிப்போகும் ‘டியூட்’!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டியூட் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி ரேஸில் இணைந்த பிரதீப்-ன் 'எல்ஐகே'.... தள்ளிப்போகும் 'டியூட்'!

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ‘லவ் டுடே’ படத்திலிருந்து மூலம் இந்திய அளவில் சிறந்த இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர், ‘லவ் டுடே’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘எல்ஐகே’ – LOVE INSURANCE KOMPANY திரைப்படத்தையும், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் டியூட் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டியூட்’ திரைப்படமானது ஏற்கனவே 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.தீபாவளி ரேஸில் இணைந்த பிரதீப்-ன் 'எல்ஐகே'.... தள்ளிப்போகும் 'டியூட்'! ஆனால் சமீபத்தில் ‘எல்ஐகே’ திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டதனால் ‘டியூட்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

மேலும் ‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ