spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மான் கராத்தே' பட விழாவில் அப்படி பேசுனதுக்கு கிண்டல் பண்ணாங்க... ஆனா இப்போ.... சிவகார்த்திகேயன்!

‘மான் கராத்தே’ பட விழாவில் அப்படி பேசுனதுக்கு கிண்டல் பண்ணாங்க… ஆனா இப்போ…. சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், மதராஸி பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.'மான் கராத்தே' பட விழாவில் அப்படி பேசுனதுக்கு கிண்டல் பண்ணாங்க... ஆனா இப்போ.... சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனக்கான அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகியுள்ள இந்த படம் 2025 செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. 'மான் கராத்தே' பட விழாவில் அப்படி பேசுனதுக்கு கிண்டல் பண்ணாங்க... ஆனா இப்போ.... சிவகார்த்திகேயன்!இதற்கிடையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 24) சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா தன்னை கிண்டல் செய்தது குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர்,”ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளர் ஒரு படம் பண்றாங்க. நீங்க ஹீரோவாக நடிக்கணும்னு கேட்டாங்க. இதற்கு தானே நம்மளும் ஆசைப்பட்டோம் அப்படின்னு சொல்லி நடிச்ச படம் தான் மான் கராத்தே. அந்தப் படத்தோட இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் சார் இருந்தாரு. சங்கர் சார் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது மேடையில் பேசும்போது, என்னைக்காவது ஒரு நாள் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சங்கர் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும். அதுதான் என் ஆசை. அதற்காக என் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தேன்.'மான் கராத்தே' பட விழாவில் அப்படி பேசுனதுக்கு கிண்டல் பண்ணாங்க... ஆனா இப்போ.... சிவகார்த்திகேயன்! அதன் பிறகு எல்லாரும் என்னை கிண்டல் பண்ணாங்க. ரெண்டு படம் ஓடிருச்சுன்னா உடனே முருகதாஸ், சங்கர் படம் கேக்குதா அப்படின்னு கிண்டல் பண்ணாங்க. ஆனால் என்னைக்காவது ஒருநாள் அது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. நீங்கள் எனக்காக கைதட்டுனீங்க. நான் ஓடிக்கிட்டே இருந்தேன். இப்பொழுது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். நீங்க எல்லாரும் தான் என்னை இந்த இடத்தில் நிற்க வச்சிருக்கீங்க” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ