குஜராத்தில் தயாரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுசுகி நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு சுசுகி நிறுவனம் தயாரித்து உள்ள “இ-விதாரா சுசுகி” எனும் மின்சார வாகனங்களின் ஏற்றுமதியை பிரதமர் கொடியசைத்து செய்து தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் ஹன்சல்பூரில் உள்ள சுசுகி தொழிற்சாலையில் இருந்து கொடியசைத்து ஏற்றுமதியை தொடங்கி வைத்துள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை சுசுகி நிறுவனம் ஏற்றுமதி செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்றைய தினம் சுமார் 5,400 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பூவிருந்தவல்லி–போரூர் இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!