மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயா்த்தப்பட்டது என மெட்ரோ நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது இரயில் பயணிகளுக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ இரயில் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தான் முடிவு செய்யும் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. டெல்லியில் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின் அதாவது 8 ஆண்டுகளுக்கு பின் மெட்ரோ இரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மிகக் குறைந்த அளவிலேயே கட்டண உயா்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அனைத்து வழித்தடங்களிலும் ரூ. 1 முதல் ரூ.4 வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது எனவும் விமான விரைவுப் பாதைகளில் மட்டும் ரூ.5 கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகவும் எனவும் மெட்ரோ இரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்கள் திமுகவின் துரோக செயலை மன்னிக்க மாட்டார்கள்- ராமதாஸ் கண்டனம்
