spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடி நாக்குல சனி! நொறுங்கிய ஆம்புலன்ஸ்! விளாசும் எஸ்.பி.லெட்சுமணன்!

எடப்பாடி நாக்குல சனி! நொறுங்கிய ஆம்புலன்ஸ்! விளாசும் எஸ்.பி.லெட்சுமணன்!

-

- Advertisement -

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்ட விதம் சரியானது அல்ல. அவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த் பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், அவருடைய பேச்சும் சிறு பிள்ளைத்தனம். இந்த விவகாரத்தில் ஒரு தலைவருக்கு உரிய தகுதி துளியும் அவரிடம் இல்லை. நீங்கள் ஒரு மைதானத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, அந்த கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வந்தது என்றால் அப்போது எடப்பாடி பழனிசாமி கேட்பதில் நியாயம் இருக்கும். பேருந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவருக்கு காவல்துறை சார்பில் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பேச அனுமதி வழங்குகிறார்கள்.

நீங்கள் நின்று பேசுவது மெயின்ரோடு. அங்கே ஆம்புலன்ஸ் ஏன் வருகிறது என்று கேட்டால் அது சிறுபிள்ளைத்தனம் இல்லையா?  அப்படி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வீம்புக்காக செல்கிறார்கள் என்றால்? ஏதேனும் ஒரு நிகழ்வை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து காட்ட வேண்டும். ஒரு அரசியல் தலைவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பார்த்து கை, கால்களை உடைத்துவிடுவேன் என்று பேசலாமா? இந்த நடத்தை சரியானது அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். ஒரு தலைவர் செய்கிற காரியம் இது அல்ல.

ஆம்புலன்ஸ் விவகாரம் அரசியலில் எதிரொலிக்கக்கூடாது. மக்கள் இதை ஒரு பொருட்டாக கூட நினைக்கக்கூடாது. மாறாக  எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்தை எல்லோரும் கவனிக்க வேண்டும். அப்படி எல்லோரும் கவனிக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வு அவருக்கு வர வேண்டும். ஏதோ அன்று எடப்பாடி பழனிசாமிக்கு சந்திராஷ்டமம் என்று நினைக்கிறேன். அவருடைய நாக்கில் சனி வந்து உட்கார்ந்துகொண்டது. கேமராக்கள் தங்களை கவனிக்கின்றன என்று ஒரு கவுன்சிலருக்கு கூட எச்சரிக்கை உணர்வு வந்துவிட்டது.

ஆனால் இந்த நாட்டை மீண்டும் ஆள வேண்டும் என்கிற கோரிக்கையோடு வந்துகொண்டிருக்கும் நீங்கள் கையை உடைத்து விடுவேன் என்று பேசலாமா? அப்போது விவரம் தெரியாமல் உண்மையாகவே எடப்பாடி செல்கிற பாதையில் ஆம்புலன்சை விடுகிறார்களோ என்று நினைக்கிற ஒரு கூட்டம் இருக்கும். எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடி தங்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். அதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்.

நெல்லையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், எடப்பாடியின் பெயரை சொல்ல மறுக்கும் அமித்ஷாவை வைத்துக்கொண்டு அவரை முதலமைச்சர் ஆக்குவோம் என்று அண்ணாமலை சொல்வது லேசான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று நயினார் சொன்னதும் தினமலர் பத்திரிகையில் வந்துள்ளது. ஆனால் சில நாட்கள் கழித்து முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அங்குதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்.டி.ஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைவர், அதிமுகவின் தலைவராக உள்ளவர், தன்னுடைய பெயரை முதலமைச்சராக அமித்ஷா அறிவிக்க வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவரை எல்லோரும் பாஜவின் அடிமை என்றுதான் சொல்வார்கள்.

உதயநிதியை அடுத்து முதலமைச்சர் ஆக்க முடியாது என்று அமித்ஷா சொல்கிறார். வாரிசு அரசியலை மீண்டும் நினைவுப்படுத்தி, புதுமைப்படுத்தி திருப்பி களத்தில் விடுகிறார். இந்த விமர்சனம் எடுபடக்கூடாது. வாரிசு என்கிற அடையாளத்தை பயன்படுத்தி அதிகாரத்துக்கு வந்துவிட்ட ஒரு தனிநபர் , அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்துவிட்டால், வாரிசு என்பது ஒரு பொருட்டே அல்ல. வாரிசு என்று சொன்ன பிறகுதான் சேப்பாக்கத்தில் மக்கள் வாக்களித்தார்கள். மக்களவைத் தேர்தலில் 40க்கு, 40 இடங்களில் வெற்றி பெற்றனர்.

விஜய், அதிமுக குறித்து விமர்சிக்க மறுப்பது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி போன்றவர்களின் கையில் அதிமுக உள்ளதே என்று அவருடைய தகுதி இன்மையை வெளிப்படுத்திவிட்டார். மேலும், அதிமுகவிலேயே இருந்தாலும், அதிமுகவை ஆதரிக்காதீர்கள் என்றும் சொல்லி விட்டார்.  அப்போது வெளிப்படையாக அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து ஒருவர் வலைவீசுகிறபோது எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாம் சொன்னோம். அந்த விஜயை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். ஏனென்றால் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. நாம் பேசி கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். இதை மறைமுகமாக எங்கள் கூட்டணிக்கு ஒரு பிரம்மாண்டமான கட்சி வருவதாக சொன்னார். தங்கமணி, வேலுமணி, செல்லூர் என இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் விஜயைதான் நினைத்தனர்.

எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி...நிதி கொடுக்க அவா் தயாரா?- முத்தரசன்

முதலில் எடப்பாடி பழனிசாமி தன்னை தானே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க அவர் முன்வர வேண்டும். அப்படி அவர் முன்வராவிட்டால் இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரும் எடப்பாடியிடம் வெளிப்படையாக யார் வர போகிறார்கள் என்று கேட்க வேண்டும். யாரும் வரவில்லை என்றால் அவர்கள் வியூகத்தை மாற்றுவார்கள். இன்னமும் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை ஏமாற்றக்கூடாது. ஒன்றுபட்ட அதிமுகவை பற்றி சிந்திப்பதற்கான காலம் வந்துவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ