spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன?...

6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!

-

- Advertisement -

SIR என்பது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும் என்றும், இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  நாட்டில் தேர்தல் தொடர்பாகவும், வாக்களிப்பது தொடர்பாகவும் 2 சட்டங்கள் தான் உள்ளன. முதலாவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 326-வது பிரிவு, இந்திய குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது.  மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 21ல் தேர்தல் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. அதில் சிறப்பு திருத்தம் என்ற ஒன்று அவசியம் ஏற்பட்டால் செய்யலாம். ஆனால் SIR என்கிற சிறப்பு தீவிர திருத்தம் என்கிற பிரிவு எந்த சட்டத்திலும் கிடையாது. அப்படி இல்லாத ஒன்றை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 21ல் இதற்கான அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கிறது. அப்படி SIR மேற்கொண்டாலும் அதற்கான குறிப்பான காரணத்தை எழுத்துப் பூர்வமாக தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்கிற ஷரத்தும் அதில் இடம்பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் நாம் கேட்கிறோம், எதற்காக தமிழ்நாட்டில் SIR மேற்கொள்கிறீர்கள்? தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. தமிழகத்தில் நாளை முதல் வீடு வீடாக படிவம் விநியோகம்..!!

கடந்த 2002 -2003ஆம் ஆண்டு நடைபெற்ற SIR நடவடிக்கைகள் ஒரு வருட காலம் நடைபெற்றது. அப்படி ஒரு வருட காலத்திற்கு நடைபெற வேண்டிய விஷயத்தை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என்றால், எப்படி முடியும்? தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் ஒட்டுமொத்தமாக குளறுபடியாக உள்ளது. எனவே இப்போது செய்தால் தான் செய்ய முடியும் என்கிற நிலைமை இருக்கிறதா? அண்மையில் தானே 2024 மக்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது SIR-ஐ செய்ய வேண்டியது தானே. அதற்கு காரணம் அது மோடி போட்டியிடும் தேர்தல். எனவே அப்போது செய்ய மாட்டார்கள்.

ஆனால் தங்களுக்கு எதிராக உள்ள மாநிலங்களில் மட்டும் செய்வார்கள். 2002க்கு பிறகு 20 ஆண்டுகள் SIR நடத்தாமல் இருந்துவிட்டு தற்போது தமிழ்நாடு, கேரளாவில் தேர்தல் நடைபெறும்போது, அதனை செய்வதால் தான் சந்தேகம் எழுகிறது. இது கட்சி சார்ந்த பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் பிரச்சினையாகும். மக்களிடம் இருக்கும் ஒரே உரிமை வாக்களிக்கும் உரிமைதான். அதையும் இழந்துவிடுவார்கள் என்கிற நிலைமை தான் தற்போது உள்ளது.

வழக்கமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்றால் புதிதாக வாக்காளர்களை சேர்ப்பது, இறந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது ஆகும். ஆனால் தற்போது ஒட்டுமொத்தமாக எல்லோரும் புதிதாக விண்ணப்பம் கொடுத்து வாக்காளராக பதிவு செய்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36 லட்சம் பேரும் புதிதாக  விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்திட வேண்டும். கடந்த 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் காலத்தில் ஒரு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதை அடிப்படையாக கொண்டு தான் 2003ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆவணங்களை கேட்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் வேலை என்பது ஒருவர் வாக்காளரா? என்று பார்ப்பதுதான். ஒருவருக்கு குடியுமை உள்ளதா? என்று பார்ப்பது உள்துறை அமைச்சகத்தின் வேலையாகும்.  அந்த வேலையை தேர்தல் ஆணையம் மூலம் ஏன் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி. இப்படி பீகாரில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை.

chennai voters

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர்  என ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். தற்போது SIR பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் யாரும் இங்கே இருக்க மாட்டார்கள். அப்போது அவர்களால் விண்ணப்பங்களை கொடுக்க முடியாது. இதனால் லட்சகணக்கானோர் தங்களின் வாக்குரிமையை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில் இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை பாஜகவினர் வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிட தயாராக உள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மார்வாடிகள் மூலம் பணம் வழங்கி இந்த வேலைகளை செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் SIR நடத்துவதற்கு முன்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவில்லை. வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களை நீக்கிவிட்டு, அதற்குரிய காரணத்தை சொல்ல மறுக்கிறது தேர்தல் ஆணையம். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள். SIRல் பெற்றோர்கள் விவரங்களை கேட்கிறார்கள். அவர்கள் இறந்திருந்தால் அவர்களின் சான்றிதழ்களையும் கேட்கிறார்கள். அப்போது, SIR நடவடிக்கை என்பது பெரும்பான்மை மக்களை தேர்தல் என்கிற நடவடிக்கைகளில் இருந்து நீக்குவதாகும்.

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

2035ல் இந்தியாவை ஒரு பார்ப்பன வைதீக நாடாக அறிவிப்பதை நோக்கிதான் அனைத்து வேலைகளும் நகர்த்தப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.  ஜனநாயகத்தில் ஆர்வம் கொண்ட அனைத்து சக்திகளும் ஒருங்கிணைந்து SIR-ஐ தடுக்க வேண்டும். SIR எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்வதால் எந்த பயனும் கிடையாது. மக்களிடம் தான் போக வேண்டும். போராட்டத்தின் மூலம் பாஜக தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்கிற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதிமுக , பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் தங்களின் வெற்றிக்கு பாஜக உதவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பாஜகவின் நோக்கம் என்பது 2026 தேர்தலில் வெற்றி பெறுவது கிடையாது. அதிமுகவை ஒழித்துவிட்டு அடுத்த தேர்தலில் திமுக – பாஜக என்கிற போட்டியை ஏற்படுத்துவது தான். இன்றைக்கு SIRக்கு துணை போனால், நாளை அதிமுக என்கிற கட்சி இருக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ