spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!

திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!

-

- Advertisement -

சுப.வீரபாண்டியன்திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!

இந்தியா விடுதலைபெற்ற சில ஆண்டுகளிலேயே, திட்டமிட்டு ஒரு மதக் கலவரத்திற்கான சிக்கல் உருவாக்கப்பட்டது! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லி, இரவோடு இரவாக ஒரு ராமர் சிலையைக் கொண்டு போய் அங்கு வைத்தார்கள். அது எவ்வளவு பெரிய சிக்கலாகப் பிற்காலத்தில் வளர்ந்தது என்பதை வரலாறு சொல்லும்!

1992 டிசம்பர் 6 ஆம் நாள், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு, உயிர்ப்பலிகள், இறுதியாக அந்த இடத்தில் ராமர் கோயிலை இப்போது எழுப்பி இருக்கிறார்கள்.

we-r-hiring

இதேபோல, கேரளாவில் இப்போது புதிய சிக்கலுக்கு விதை போட்டிருக்கிறார்கள்!திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!

கேரள மாநிலத்தில், பாலக்காட்டில் ஒரு பெரிய கோட்டை இருக்கிறது! அதற்குத் திப்பு சுல்தான் கோட்டை என்று பெயர். 1766ஆம் ஆண்டு ஹைதர் அலி அந்தக் கோட்டையைக் கட்டினார். மைசூர் அரசின் மன்னராக இருந்த அவர், தன்னுடைய ராணுவ வலிமையைப் பல இடங்களிலும் நிலைநாட்டிக் கொள்வதற்காக அதனைத் தன் மகன் பெயரில் உருவாக்கினார்.

அவர் இறந்தபிறகு, 1783ஆம் ஆண்டு முதல் அந்தக் கோட்டை திப்பு சுல்தான் பொறுப்பில் இருந்து வந்தது! இப்போது திடீரென்று அங்கு ஓர் ஆஞ்சநேயர் கோவில் உருவாகி இருக்கிறது!

கோயில் என்றால், பெரிய கோபுரங்களோ, அதற்குள் சிவைகளோ எதுவும் இல்லை! கூடாரம் போல ஒரு கட்டிடம் (Shed)உருவாக்கப்பட்டு, அதில் அனுமார் படம் வைக்கப் பட்டிருக்கிறது. ஆமாம், சிலைகூட இல்லை வெறும் படம்தான்!

ஆஞ்சநேயருக்கு உகந்த நாள்கள் என்று சொல்லி, வியாழன், சனி ஆகிய இருநாள்களிலும் அங்கு மக்கள் கூடத் தொடங்கினார்கள். உடனே வழக்கம்போல் ஓர் உண்டியலும் வைக்கப்பட்டது! பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து, அந்தத தகரக் கொட்டகையைக் கோயில் என்று கூறி, தங்கள் நிர்வாகத்திற்குள் அதை எடுத்துக் கொண்டார்கள்.திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!எதிர்ப்புகளும் வரத் தொடங்கின. அதைச் சமாளிப்பதற்கு ஓர் உத்தியைக் கையாண்டார்கள்! வியாழன், சனி இரண்டு நாள்களிலும் பக்தர்களுக்கு மதியம் 12 மணி முதல் 2 மணி வரை அள்ளதானம் செய்யத் தொடங்கினார்கள். உடனே பெரும் கூட்டம் வரத் தொடங்கியது!

இப்போது திப்பு சுல்தான் கோட்டையில், ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமே எங்கும் எதிரொலிக்கிறது! அனுமார், திப்பு சுல்தான் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதை அனுமார் கோட்டையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்!

கேரள அரசின் தொல்லியல் துறைக் கண்காணிப்பில் இருத்துவரும் திப்பு சுல்தான் கோட்டையில், இப்படி ஓர் ஊடுருவலும், மதக்கலவரத்திறகான புதிய சூழலும் ஏற்பட்டு இருப்பதை இன்றுவரையில் கேரள அரசு தலையிட்டுத் தடுக்கவில்லை!

பாலக்காட்டுப் பகுதியில், எப்போதும நம்பூதிரிகளின் ஆதிக்கம் எவ்வளவுகோலோச்சத் கூடியது என்பதை எல்லோரும் அறிவோம்! அவர்கள் சாதாரணப் பார்ப்பனர்களைக் காட்டிலும் மிகச் கூடுதலாக ஆதிக்கம் செலுத்தக் கூடிய இயல்பும் மற்றவர்களை அவமதிககும் குணமும் கொண்டவர்கள்! ஒரு விதத்தில் தில்லை தீட்சிதர்களைப் போன்றவர்கள் அவர்கள்!

இதில் கேரள அரசு உடனே தலையிட்டு நியாயம் செய்ய வேண்டும்! அவர்கள் தங்களின் சொந்த இடத்தில், எத்தனை அனுமார் கோயில்களை வேண்டுமானாலும் சுட்டிக் கொள்ளட்டும். ஆனால் அதற்குத் திப்பு சுல்தான் கோட்டையைப் பயன்படுத்துவது எந்த விதத்திலும் சரியானதில்லை!

எம்.எல்.ஏ அருள் மீது கொலை முயற்சி?? அன்புமணி ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சி..!!

MUST READ