spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு! வெல்லப் போவது யார்? உமாபதி லைவ் ரிப்போர்ட்!

பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு! வெல்லப் போவது யார்? உமாபதி லைவ் ரிப்போர்ட்!

-

- Advertisement -

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், இந்த தேர்தலில் ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகாரில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள களநிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது :- பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்துவிட்டது. மொத்தமுள்ள 243 இடங்களில் நாளை  முதற்கட்டமாக 121 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக நவ.11ஆம் தேதி 122 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் தேர்தல் ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றதால் அது ஒரு இந்தி பெல்ட் மாநிலம். மற்றொன்று 20 ஆண்டுகளும் பீகாரை ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமாரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும். நிதிஷ்குமாரின் 20 ஆண்டு கால ஆட்சியில் பீகார் மாநிலத்தை நாசக்காடாக மாற்றி வைத்திருக்கிறார். சமீபத்தில் பீகாரின் வளர்ச்சிக்காக 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி, ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டனர். தன்னுடைய ஆட்சியில் இந்தியாவின் அவமானமாக பீகாரை மாற்றி வைத்துள்ளார் நிதிஷ்குமார்.

இப்படியான சூழலில் பாஜக பீகாரில் தோற்றுவிட்டால், ஆர்எஸ்எஸ் கைகள் ஓங்கிவிடும். எனவே மோடி, அமித்ஷா உயிரை கொடுத்து தேர்தல் வேலைகளை பார்த்து கொண்டிருக்கின்றனர். பீகாரில் வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்ற நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளது, அம்மாநில மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணமாக உள்ள பாஜக மீதும் அவர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அதனால் தான் வாக்கு திருட்டு, எஸ்.ஐ.ஆர், தேர்தல் ஆணையம் போன்றவற்றை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுகிறார்கள். பீகாரில் கடந்த முறை ஆர்ஜேடி 75 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் பிடித்தன. கடந்த முறை தேஜஸ்வி யாதவ் 75 இடங்களை பிடித்தபோதும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளித்தார். அதன் பின்னர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணிக்கு சென்று 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.

தற்போது ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பீகாரில் எஸ்.ஐ.ஆர் மூலம் 65 லட்சம் வாக்குகளை நீக்கிய நிலையில், பின்னர் உச்சநீதிமன்ற நடவடிக்கை காரணமாக  20 லட்சம் வாக்காளர்களை சேர்த்துவிட்டனர். அதேபோல் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 4-5 சதவீதம் வாக்குகளை தான் பெறுவார். அவரை களமிறக்கி விட்டதும் பாஜக தான். எனவே இம்முறை ஆர்.ஜே.டிதான் ஆட்சியை பிடிக்கும் சூழல் தான் இருக்கிறது. இம்முறை காங்கிஸ் கட்சி 25 முதல் 30 இடங்கள் வரை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேஜஸ்வி 80 இடங்கள் வரை பிடித்தால் மகாபந்தன் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை வெற்றி பெறாவிட்டால் மோடியின் பிரதமர் பதவிக்கு ஆபத்து உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ