Homeசெய்திகள்சினிமாதெறிக்கவிடும் விஷால்.... 'மார்க் ஆண்டனி' வரிசையில் இணைந்த 'மகுடம்'!

தெறிக்கவிடும் விஷால்…. ‘மார்க் ஆண்டனி’ வரிசையில் இணைந்த ‘மகுடம்’!

-

- Advertisement -

விஷால் நடிக்கும் மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தெறிக்கவிடும் விஷால்.... 'மார்க் ஆண்டனி' வரிசையில் இணைந்த 'மகுடம்'!

தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து விஷால், ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ ஆகிய படங்களின் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் தனது 35 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மகுடம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தெறிக்கவிடும் விஷால்.... 'மார்க் ஆண்டனி' வரிசையில் இணைந்த 'மகுடம்'! சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ‘மகுடம்’ படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் விஷால் மூன்று கெட்டப்புகளில் காணப்படுகிறார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஷால், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் 3 கெட்டப்புகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ