சூர்யா – ஜோதிகா ஆகிய இருவரும் லோகா படத்தை பாராட்டியுள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் லோகா. இந்த படத்தை துல்கர் சல்மான் தயாரிக்க டோமினிக் அருண் இந்த படத்தை இயக்கியிருந்தார். சூப்பர்வுமன் படமாக வெளியான இந்த படம் இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் வெளியான முதல் ஏழு நாட்களில் ரூ.100 கோடியை கடந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் ஆதரவு கிடைத்து வருவதால் இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Naslen: #Suriya sir and #Jyothika mam did a video call to me this morning and appreciated our film #Lokah..❣️🤝💥pic.twitter.com/y95xPvKfwt
— Laxmi Kanth (@iammoviebuff007) September 4, 2025
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 4) இந்த படத்தின் வெற்றி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மேடையில் பேசிய நஸ்லேன், இன்று காலையில் சூர்யா – மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் வீடியோ கால் மூலம் ‘லோகா’ படத்தை பாராட்டியதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.