spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபாஜகவின் சித்து விளையாட்டு! ஆதாரம் இருக்கு! அடித்து சொல்லும் பாலச்சந்திரன்!

பாஜகவின் சித்து விளையாட்டு! ஆதாரம் இருக்கு! அடித்து சொல்லும் பாலச்சந்திரன்!

-

- Advertisement -

ஓபிஎஸ், தினகரன் அதிமுகவுக்குள் வந்தால், தன்னை காலி செய்துவிடுவார்கள் என்று அவர்களை எடப்பாடி வர விடாமல் தடுத்துவிட்டார். எனவே கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையனை வைத்து பாஜக மீண்டும் பிரச்சினையை தொடங்கியுள்ளது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பது என்பது எடப்பாடியின் துணிச்சலான நடவடிக்கை மட்டும் அல்ல. அது சர்வைவலுக்காக எடப்பாடி பழனிசாமி நடத்துகிற போராட்டமாகும். எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுக்கு இன்றைக்கு போய் நிற்பதற்கு ஒரு தலைவர் கிடையாது. அதே வேளையில், சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் அதிமுகவுக்குள் வந்துவிட்டால், அப்படி பட்டநிலை வந்துவிடும். சசிகலா, இதற்கு முன்பாக எவ்வளவு அதிகாரத்தோடு இருந்தார். எனவே நிறைய பேர் அவர் பின்னால்  செல்லலாம் என்கிற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. கடந்த தேர்தலில் அவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாம் என்று எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதில் வெற்றி கண்டுவிட்டார்.

நாட்டையே ஆளுகிற பாஜக ஏன்? எடப்பாடியின் பின்னால் செல்கிறார்கள் என்கிற கேள்வி எழலாம். அதற்கு திமுகவை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சொல்லாம். அவற்றை எல்லாம் தாண்டி, திராவிடம் என்கிற பெயரில் இருக்கும் அரசியல் கொள்கையை காலி செய்ய வேண்டும் என்பதாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் கொள்கையை பெரியார் ஏற்றுக்கொண்டார். அவரின் வழிவந்த திராவிட இயக்க தலைவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது கம்யூனிஸ்ட்டுகள், திராவிட கட்சிகள் சொல்வது. ஆனால் இவர்கள் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட மேம்பாடுதான் தங்களுடைய பொருளாதார கொள்கை என்று சொல்கிறார்கள். இதில் நாட்டில் எத்தனை விமான நிலையங்கள், துறைமுகங்கள் வந்துள்ளன. ஜிடிபி எவ்வளவு உயர்ந்துள்ளது என்கிற புள்ளி விபரங்கள் தான் இருக்கும். ஆனால் தனி மனிதர்களின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரங்கள் இருக்காது. அப்படிபட்ட வளர்ச்சிதான் தங்களுடைய பொருளாதார கொள்கை என்று சொல்லிவிட்டார்கள்.

பாஜகவை பொருத்தவரை திராவிட கொள்கை அழிய வேண்டும். அந்த இடத்தில் இந்துத்துவா கொள்கை வர வேண்டும். 2026 சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் கண்டிப்பாக பாஜக ஆட்சியை பிடிக்காது. அப்போது ஆட்சியை பிடிப்பது அவர்களுடைய நோக்கம் இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு 2வது இடத்திற்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்வது? 2வது இடத்தில் இருக்கும் அதிமுகவை காலி செய்ய வேண்டும். உறவாடி காலி செய்வதில் பாஜகவினர்  கெட்டிக்காரர்கள். பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் அப்படி தான் காலி செய்தார்கள். அதே பாணியை தமிழ்நாட்டிலும் கையில் எடுக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம் தெளிவு இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அவர் செய்யும் தவறு என்ன என்றால்? அதிமுக ஆட்சியை பிடிப்பதை விட, அதிமுக பலம் பெறுவதை விட தான் முதன்மை பெற வேண்டும் என்பதுதான் இலக்காக உள்ளது.

கடந்த தேர்தலில் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கினார். இதன் மூலம் வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்குகளை அதிமுகவுக்கு மடைமாற்றம் செய்தார். அதேவேளையில் இந்த இடஒதுக்கீட்டால் தென் மாவட்டங்களில் போட்டியிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தோல்வி அடைந்தனர். அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதன் மூலம் தன்னுடைய வெற்றிக்காக அதிமுகவை பலவீனப்படுத்தினார். அடுத்து தமிழ்நாட்டில் உள்இடஒதுக்கீட்டின் அடிப்படை கோட்பாட்டை மீறினார். இன்றைக்கு அவர் அதிமுக ஆட்சியை பிடித்தால் நான் தான் முதலமைச்சர். இல்லாவிட்டால் நான் தான் எதிர்க்கட்சி தலைவர் என்று நினைக்கிறார். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் போன்றவர்கள் அதிமுகவுக்குள் வந்தால், எடப்பாடியை காலி செய்துவிடுவார்கள். எனவே அதிமுகவை ஒன்றிணையுங்கள் என சொன்னார்கள். ஆனால் அதை எடப்பாடி நடத்த விடவில்லை. எனவே, அதிமுகவுக்கு உள்ளே இருக்கும் செங்கோட்டையனை வைத்து மீண்டும் பிரச்சினையை தொடங்கியுள்ளனர்.

செங்கோட்டையன், பாஜக பக்கம் சென்றார் என்பதையோ, அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் என்பதையோ யாராலும் மறுக்க முடியுமா? தற்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் சேர்க்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். மூத்த தலைவராக இருந்தபோதும் செங்கோட்டையன், பொது ச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிக்க முடியுமா? இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை நெருக்கடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். இவற்றை எல்லாம் மீறி, நானே கட்சி என்று எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து இருக்கிறார். விஜய் கட்சியை உருவாக்கியது பாஜக தான் என்று நம்புகிறேன். அதிமுகவும், விஜய் கட்சியும் இணைந்தால் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பாஜக நினைத்தால் அவர்கள் அதிமுகவை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைப்பார்கள். எப்படியாவது திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் இறுதி நோக்கம் அல்ல. திராவிட கொள்கைகளை எப்படியாவது நீர்த்துபோக செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் முதன்மையான நோக்கமாகும்.

விஜய் வாங்குகிற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது. நான் முதலில் விஜய்க்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் வரும் என்று நினைத்தேன். ஆனால் இன்றைக்கு அவருக்கு அவ்வளவு வாக்குகள் வருமா என்று தெரியவில்லை. விஜய் எந்த அளவு பிரச்சாரம் செய்யப் போகிறார்? எப்படி செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும் பவுன்சர்களை வைத்து தூக்கி எறிய போகிறாரா? அல்லது எம்ஜிஆரை போல வயதானவர்களை கட்டிப்பிடித்து பணத்தை கொடுப்பார். எம்ஜிஆரிடம் அரசியலில் பல பிரச்சினைகள் இருந்தாலும், யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்று நினைத்தவர் அவர்.அதுபோல விஜய் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. விஜயின் நடிப்பை நான் மதிக்கிறேன். அதேவேளையில் அவரது அரசியல் பெரிய நடிப்பாக இருக்கிறது. இவ்வளவும் செய்வது பாஜகதான். அவர்கள் மேலே இருந்து ஆட்டி வைக்கிறார்கள். விஜய், பாஜக என்ன சொல்கிறதோ அதைதான் கேட்டு நடக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் அவர் திருக்குறள் பெரியார் குறித்து பேசிவிட்டு, பகவத் கீதையை வழங்க மாட்டார். பெரியாரையும், பகவத் கீதையையும் ஒன்றாக வைத்து பார்க்கவே முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ