புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக முறையே 236 மற்றும் 82 நபர்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்கள் கே.எஸ்.பி.ரமேஷ், செந்தில்குமார், அரசு செயலர்(நலம்) முத்தம்மா, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். அவை உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்படும். புதிதாக 10 ஆயிரம் விண்ணப்பங்கள் முதியோர் தொகை பெறுவதற்காக உள்ளது. 10 ஆயிரம் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அடுத்த மாதமே முதியோா் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 18ம் தேதி முதியோருக்கு உதவித் தொகை தரப்படும். விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
என்.டி.ஏ. ஆட்சி காலி! வெளியேறும் முக்கிய கட்சி! பீகாரில் செம ஆப்பு! ராகுல் – தேஜஸ்வி செம மூவ்!
