Homeசெய்திகள்சினிமாவிஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் 'ஆர்யன்'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘ஆர்யன்’…. புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ஆர்யன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் 'ஆர்யன்'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது இரண்டு வானம், ஓர் மாம்பழ சீசனில் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். பிரவீன் கே. இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பின்னர் இப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ராட்சசன்’ படத்தை போல் இந்த படமும் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாளை (செப்டம்பர் 30) இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் 'ஆர்யன்'.... புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க இவருடன் இணைந்து செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ