spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…

தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…

-

- Advertisement -

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…

வேலூாில் உள்ள காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டாா். பின்னர் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூர் விவகாரத்தில் தவெக குறித்து நீதிபதிகள் சொல்வதுதான் முக்கியம், என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நீதிபதிகள் உண்மையை கூறி உள்ளார்கள். என நம்புகின்றோம். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி என எதிா்கட்சித் தலைவரான எடப்பாடி கூறுகிறார். ஒவ்வொருவரும் அப்படித்தான் சொல்வார்கள். ஏன் சீமான் கூட சொல்லுவார் தேர்தல் நெருங்கும்போதும், தேர்தலில்தான் தெரியும். 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல. உலகமே பார்த்த ஒன்று. விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம். தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அவன் சொன்ன அந்த வார்த்தை என்னை ரொம்ப பாதிச்சது…. துருவ் விக்ரம் குறித்து மாரி செல்வராஜ்!

we-r-hiring

MUST READ