அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.
அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதன் வேர், இலை, பட்டை, பழம் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச இலையில் பல இயற்கையான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. அதன்படி அரச இலையை உலர்த்தி பொடியாக்கி அதை தேனுடன் கலந்து பருகினால் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை குணமடையும்.

அரச இலைச்சாறு சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை சூடான நீரில் கலந்து குடித்து வர நுரையீரல் சுத்தமாகும்.
அரச இலைச்சாறு மலமிளக்கியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். மேலும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்யவும் உதவும். இது தவிர அரச இலைகளில் உள்ள ஃபைட்டோகெமிக்கல்கள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும் உதவுகிறது.
அடுத்தது அரச இலைத்தூள் அல்லது சாறு ரத்த சர்க்கரை அளவை குறைக்க இயற்கையாகவே உதவுகிறது. இதனை காலை வெறும் வயிற்றில் குடிப்பதனால் நல்ல பலன் கிடைக்கும்.
அரச இலைகளின் சாறு உடல்களில் உள்ள நச்சுக்களை நீக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே அரச இலைச்சாறில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வாயு பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவை குணமடையும். மேலும் இது சிறுநீரை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரில் எரிச்சல், கற்கள் உருவாகுதல் போன்ற பிரச்சனைகளை தடுக்கவும் இந்த அரச இலைச்சாறு பயன்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரும். அதன்படி அரச இலைச்சாறை முகத்தில் தேய்த்தால் முகத்தின் தோல் மென்மையாகும்.
இவ்வாறு அரச இலைச்சாறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருப்பினும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இதை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.