spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…

முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…

-

- Advertisement -

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மூத்த நிர்வாகிகள் இல்லாமல் இபிஎஸ் இல்லத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளருடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பா.ஜ.கவுடன் இ.பி.எஸ் ரகசிய ஆலோசனை…

தமிழக அரசியல் களத்தில் அதிமுக, பாஜக மீண்டும் தேர்தலில் கூட்டணி வைத்து 2026 சட்டமன்ற பொது தேர்வுகளை சந்திக்க உள்ளது. பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்  பைஜெயந்த் பாண்டா  நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சந்தித்து பேசினர்.

we-r-hiring

தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், கூட்டணியை வலுபடுத்தும் விதமாகவும் இந்த சந்திப்பில் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் குறித்தும் அதில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் இபிஎஸ் பங்கேற்கவும் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் தமிழகம் வந்துள்ளதால் தொகுதி பங்கீடு தொடர்பாக அடிப்படை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை தக்க வைப்பது குறித்தும் முதற்கட்டமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டணியை வலுப்படுத்தும் விதத்தில் பிரிந்து சென்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக துணை தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தார்கள். ஆனால் ஜெயப்பிரகாஷ் இவர்கள் பேசும் போது வெளியே வந்துவிட்டார்.

வழக்கமாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் போது அதிமுக முக்கிய நிர்வாகிகள் கே பி முனுசாமி, எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், சி வி சண்முகம், தம்பிதுரை ஆகியோர் உடனிருப்பர். இதில் ஓரு சில நிர்வாகிகள் ஒவ்வொரு சந்திப்பிலும் இருந்துள்ளனர். ஆனால் இன்றைய சந்திப்பில் இபிஎஸ் மட்டுமே இருந்தார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் யாரும் இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட ஷூட்டிங் இந்த தேதியில் தான்!

MUST READ