இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு குறித்து பேசி உள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் தற்போது ‘டியூட்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கீர்த்திஸ்ரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜு, சரத்குமார், ரோகினி மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல் கலந்த ஜாலியான என்டர்டெயினர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 17 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.
அதன்படி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை போல் இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு குறித்து பேசி உள்ளார்.
#PradeepRanganathan Recent
– I wanted to work with #MamithaBaiju for #LoveToday, but she was busy with #Vanangaan.
– There’s a short film where she eats Appalam it’s really cute!
– In #Dude you’ll get to see her emotional side too.pic.twitter.com/bamENqdmwd— Movie Tamil (@_MovieTamil) October 11, 2025

அதன்படி அவர், “மமிதா மிகவும் திறமையான நடிகை. அவர் எனக்கு டஃப் கொடுக்கிற மாதிரி நடித்தார். நான் லவ் டுடே படத்திலேயே மமிதா பைஜுவுடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் அவர் அப்போது ‘வணங்கான்’ படத்தில் பிஸியாக இருந்தார். அதற்கு முன்பாக அவருடைய ஒரு குறும்படத்தை பார்த்தேன். அதில் அவர் அப்பளம் சாப்பிடுவது க்யூட்டாக இருக்கும். இந்த படத்தில் மமிதா பைஜுவின் எமோஷனல் பக்கத்தையும் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


