பொதுவாக தினமும் இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது. இது உடல் சுகாதாரத்திற்கு மட்டுமல்லாமல், மனதிற்கும் பல நன்மைகளை தருகிறது. அதிலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக குளிக்கும்போது உடல் புத்துணர்ச்சி பெரும். எனவே மூளைக்கு சிக்னல் சென்று நிம்மதியான உறக்கம் கிடைக்கும். இப்போது இரவில் தூங்குவதற்கு முன்பாக குளிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நாள் முழுக்க உடலில் படிந்திருக்கும் தூசி, வியர்வை போன்றவை நீங்கி தோல் சுத்தமாகும். இதன் மூலம் நுண்கிருமிகள் தாக்கி நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும். குறிப்பாக இரவில் குளிப்பது சுகாதாரம் மட்டுமல்லாமல் நீண்ட ஆயுளை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்தது இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக குளித்தால் உடலின் வெப்பநிலை சமநிலைக்கு வரும். நாள் முழுவதும் உடல் சற்று சூடாக இருக்கும். எனவே இரவில் தூங்குவதற்கு முன்பு குளித்தால் உடல் வெப்பம் தணிந்து ஃப்ரெஷ் பீலிங் கிடைக்கும். இது நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும். நாள் முழுக்க சோர்வடைந்த தசைகளும் தளர்ச்சி அடையும். உடல் சோர்வு குறையும்.இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் ரத்த ஓட்டம் சீராகி உடல் சுறுசுறுப்பாகும். உடலில் ஏற்படும் வலிகள் குறையும். இரவில் குளிப்பது மன அமைதியை தருவதோடு மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன்பாக 30 நிமிடங்களுக்கு முன்னர் குளிப்பது மிகவும் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் கழுத்து முதல் பாதம் வரை குளித்தாலும் போதுமானது. இருப்பினும் குளித்த பின்னர் ஏசியில், குளிர்ந்த காற்றில் இருப்பதை தவிர்ப்பது நல்லது.