spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'லவ் டுடே 2' படம் பண்ண ஐடியா இருக்கு... ஆனா.... பிரதீப் ரங்கநாதனின் பதிலால் எகிறும் எதிர்பார்ப்பு!

‘லவ் டுடே 2’ படம் பண்ண ஐடியா இருக்கு… ஆனா…. பிரதீப் ரங்கநாதனின் பதிலால் எகிறும் எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே 2 படம் குறித்து பேசி உள்ளார்.'லவ் டுடே 2' படம் பண்ண ஐடியா இருக்கு... ஆனா.... பிரதீப் ரங்கநாதனின் பதிலால் எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் இவர் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதன் பின்னர் ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருந்தார். இந்த படத்தில் இவானா, யோகி பாபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். கலகலப்பான காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.'லவ் டுடே 2' படம் பண்ண ஐடியா இருக்கு... ஆனா.... பிரதீப் ரங்கநாதனின் பதிலால் எகிறும் எதிர்பார்ப்பு! மேலும் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடியை தட்டி தூக்கினார் பிரதீப். அதன் பின்னர் இவர், தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டியூட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே 2 படம் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி அவர், “லவ் டுடே படத்தின் தொடர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த ஐடியாவையும் நான் யோசித்து வைத்திருக்கிறேன். ஆனா அது சீக்கிரம் நடக்காது. லவ் டுடே 2 படத்திற்கு முன்பாக ஏதாவது புதுசா ட்ரை பண்ணனும்னு நினைச்சுட்டு இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.'லவ் டுடே 2' படம் பண்ண ஐடியா இருக்கு... ஆனா.... பிரதீப் ரங்கநாதனின் பதிலால் எகிறும் எதிர்பார்ப்பு!

we-r-hiring

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட ரஜினி – கமல் இணையும் புதிய படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கப்போகிறார் என்று பேச்சு அடிபட்டது. ஆனாலும் இது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், புதிதாக முயற்சி செய்ய இருக்கிறேன் என்று கூறியிருப்பது அவர் இயக்க உள்ள அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ